Paristamil Navigation Paristamil advert login

ஒரு நாள்... ஒரு வாழ்க்கை

ஒரு நாள்... ஒரு வாழ்க்கை

5 சித்திரை 2025 சனி 08:46 | பார்வைகள் : 338


பறவைகள் கீச்சிடும்
பரவசமாய் ஏதோ பற்றி

உயர்ந்ததாய் நோக்கமில்லை
உரையாடலின் பொருளிலே

கீச்சுக்கள் எல்லாம்
குருணை பற்றியோ

பூச்சி பற்றியோ
பருவநிலை பற்றியோ...

கீச்சு, கரணம், இனப்பெருக்கம் -
மரணம் வரை இதை செய்திருக்க
மனநிறைவு கொள்வாயா?

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்