மரின்லூப்பன் தண்டனை - மேலோன்சோனை விட்டு நீங்கும் கட்சிகள்!!

5 சித்திரை 2025 சனி 09:01 | பார்வைகள் : 4952
ஏற்கனவே தீவிர வலதுசாரிகளை எதிர்த்தும், மரின் லூப்பனிற்குத் தணடனை வழங்குமாறும் ஜோன்-லுக்- மெலோன்சோன் ஒரு பேரணியை நடாத்திக் காவற்துறையினரைக் கேவலப்படுத்தி, யூத எதிரப்பவாத்ததை விதைத்திருந்தார்.
இதில் பல கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும் கலந்து கொண்டன.
நாளை ஞாயிற்றுக்கிழமை 13h00 மணிக்கு மீண்டும் மெலோன்சோன் நடாத்த இருக்கும் ஊர்வலத்தில், இடது சாரிகளின் மிக முக்கிய கட்சிகளான சோசலிசக் கட்சி (PS - Parti socialiste) மற்றும், பிரெஞ்சுக் கொம்யூனிசக் கட்சி (PCF - Parti communiste français) ஆகியவை தங்களின் ஆதரவை நீக்கியதோடு ஊர்வத்தில் கலந்து கொள்ள மாட்மோம் எனத் தெரிவித்துள்ளனர்.
மரின் லூப்பனிற்கு வழங்கப்பட்ட தண்டனை வெறும் அரசியல் மோசடி, மற்றும் அரசியல் சூழ்ச்சி எனத் தெரிவித்து மேலோன்சோனிற்கான ஆதரவை நீக்கி உள்ளனர்.
இதனால் மெலோன்சோன் தனித்து விடப்பட்டுள்ளார். இவர் சொல்லும் இடதுசாரிக் கூட்டணி சிதறடிக்கப்பட்டுள்ளது
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025