Paristamil Navigation Paristamil advert login

IPL-லில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன்! ஹர்திக் பாண்டியா அபார சாதனை

IPL-லில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன்! ஹர்திக் பாண்டியா அபார சாதனை

5 சித்திரை 2025 சனி 10:44 | பார்வைகள் : 169


ஐ.பி.எல் தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற சாதனையை கேப்டன் ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.

இன்று லக்னோவில் நடைபெற்ற ஐ.பி.எல்.-ன் 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதல் பேட்டிங்கில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்கள் குவித்தது.

அந்த அணியின் மிட்செல் மார்ஷ் 60 ஓட்டங்களும் மார்க்ரம் 53 ஓட்டங்களும் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் 204 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 191 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவி இருந்தாலும்,  அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐ.பி.எல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்த போட்டியில் தனிநபராக பந்துவீச்சில் அசத்திய ஹர்திக் பாண்டியா தனது 4 ஓவர்களில் 36 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம், ஐ.பி.எல் தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற புதிய சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.
அவரது இந்த அபார பந்துவீச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்