மிகப்பெரிய மென்பொருள் மாற்றத்திற்கு தயாராகும் ஆப்பிள்
5 சித்திரை 2025 சனி 10:50 | பார்வைகள் : 1991
ஆப்பிள், தனது iPhone, iPad மற்றும் Mac சாதனங்களுக்காக வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ளதாக நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
iOS 19, iPadOS 19 ("Luck") மற்றும் macOS 16 ("Cheer") ஆகியவை இம்முறையில் வெளிவரும் புதிய பதிப்புகளாகும்.
இந்த புதுப்பிப்பு, சாதனங்களின் மென்பொருள் வடிவமைப்பை ஒருங்கிணைத்து, பயன்பாட்டை எளிதாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அப்டேட்டில் கொன்கள், மெனுக்கள், செயலிகள் மற்றும் கட்டுப்பாடு அமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன.
இது விஷன் ப்ரோ Vision Pro மென்பொருளின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
இந்த மாற்றம், ஜூன் மாதம் நடைபெறும் எனவும் Apple Worldwide Developers Conference (WWDC) நிகழ்ச்சியில் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆப்பிளின் முக்கிய வருவாய் ஆதாரமான iPhone விற்பனை குறைந்துள்ளதால், இந்த புதுப்பிப்புகள் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதிலும் சுமார் இரண்டு பில்லியன் ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய மென்பொருள் மாற்றம் தொடர்பில் ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan