கம்போடியாவில் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் எலி…!

5 சித்திரை 2025 சனி 11:33 | பார்வைகள் : 320
கம்போடியா நாட்டில் கண்ணிவெடிகளை அடையாளம் காண பயன்படுத்தப்படும் எலி ஒன்று நூற்றுக்கும் மேற்பட்ட குண்டுகளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.
ரொனின் என அழைக்கப்படும் இந்த இராட்சத ஆபிரிக்க எலியானது, 2021ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கம்போடியாவின் வடக்கு பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அப்போதிலிருந்து குறித்த எலி, 109 கண்ணிவெடிகள் மற்றும் 15 போர் எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தையும் ரொனின் வென்றுள்ளது.
இதற்கு முன்னர், 'ஹீரோ' என அழைக்கப்படும் எலி 71 கண்ணிவெடிகள் மற்றும் 38 வெடிக்காத குண்டுகளை கண்டுபிடித்தமையே உலக சாதனையாக இருந்தது.
இராட்சத ஆபிரிக்க எலிகள் பொதுவாக பாரம் குறைந்த உயிரினம் என்பதால் அவை கன்னி வெடிகளை வெடிக்க வைக்க தூண்டாது.
அவற்றுக்கு இயற்கையாகவே அமையப்பெற்ற மோப்ப சக்தி மற்றும் பயிற்சி ஆகியவை கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.