ரஷ்யாவின் திடீர் ஏவுகணை தாக்குதல்…. 9 குழந்தைகள் உள்பட 18 பேர் பலி

5 சித்திரை 2025 சனி 11:43 | பார்வைகள் : 433
உக்ரைன் அதிபரின் சொந்த ஊரில் நடைபெற்ற ரஷ்ய தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன்,ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
அதன் முக்கிய கட்டமாக அமெரிக்கா முன்மொழிந்துள்ள 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இருநாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
இந் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்ய படைகள் திடீரென ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளன.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சொந்த ஊராக கிரிவ்வி ரிக் பகுதியில் நடைபெற்று ஏவுகணை தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.
61 பேர் படுகாயம் அடைந்தனர்.
குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும், 5 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் சேதம் அடைந்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கூறி உள்ளனர்.
தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு கொடூரமான தாக்குதல் என்றும் அவர் கூறி உள்ளார்.