'இட்லி கடை' தள்ளிப் போக காரணம் இதுவா?
5 சித்திரை 2025 சனி 11:49 | பார்வைகள் : 2976
தனுஷ் இயக்கம், நடிப்பில் உருவாகி வரும் படம் 'இட்லி கடை'. இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தை அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்கள். இத்தனை மாதங்கள் தள்ளி வைக்க என்ன காரணம் என்ற தகவல் தற்போது வந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. அப்போது தீப்பற்றி எரியும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் தனுஷுக்கு எதிர்பாராத விதமாக லேசாக காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர் பல நாட்களில் சிகிச்சை பெற்று ஓய்வெடுக்க வேண்டி வந்துள்ளதாம்.
மேலும், ஹிந்திப் படத்திலும் நடிக்க வேண்டி கால்ஷீட் கொடுத்துள்ளார். அதோடு படத்தின் நாயகியான நித்யா மேனன் கால்ஷீட்டும் சரியாகக் கிடைக்கவில்லையாம். தனுஷ், நித்யா மேனன் இருவருமே பிஸியாக இருந்ததால் அவர்களது காட்சிகளை மீண்டும் படமாக்க தாமதமாகி உள்ளது. எனவே தான் படத்தை அக்டோபருக்குத் தள்ளி வைத்துள்ளார்களாம்.
தனுஷ் நடித்து வரும் மற்றொரு படமான 'குபேரா' படம் ஜுன் 20ம் தேதி வெளியாகிறது. அது வெளியான பின்போ, முன்போ உடனே வெளியிட்டால் அது சரியாக இருக்காது என்பதால்தான் மூன்று மாதங்கள் இடைவெளி எடுத்து அக்டோபர் 1ம் தேதியை முடிவு செய்துள்ளார்கள்.


























Bons Plans
Annuaire
Scan