Impôt 2025: வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு
5 சித்திரை 2025 சனி 12:57 | பார்வைகள் : 8650
ஏப்ரல் 10, வியாழக்கிழமை முதல் 2024 கான வருமான வரிக் கணக்கை சமர்ப்பிக்க முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் போலவே, காகித படிவத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மே 20 வரை ஆகும். மேலும் ஆன்லைன் படிவத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வசிக்கும் இடத்தை பொறுத்து மாறுபடும்.
Département 1 முதல் 19 இல் வசிப்பவர்களும் பிரான்சில் வசிக்காதவர்களும் வியாழன், மே 22, 2025 வரை ஆன்லைன் படிவத்தை தாக்கல் செய்ய முடியும்.
Département 20 முதல் 54 இல் வசிப்பவர்கள் புதன்கிழமை, மே 28, 2025 வரை ஆன்லைன் படிவத்தை தாக்கல் செய்ய முடியும்.
Département 55 முதல் 974இல் வசிப்பவர்கள் வியாழன், ஜூன் 5, 2025, வரை ஆன்லைன் படிவத்தை தாக்கல் செய்ய முடியும்.

























Bons Plans
Annuaire
Scan