Paristamil Navigation Paristamil advert login

மகரந்த ஒவ்வாமை - இல்-து-பிரான்சுக்கு தீவிர எச்சரிக்கை!!

மகரந்த ஒவ்வாமை - இல்-து-பிரான்சுக்கு தீவிர எச்சரிக்கை!!

5 சித்திரை 2025 சனி 14:10 | பார்வைகள் : 1261


மகரந்த ஒவ்வாமை காரணமாக சுவாசப்பிரச்சனை, கண் எரிவு போன்ற நோய்கள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இல்-து-பிரான்ஸ், Centre Val-de-Loire, Pays de la Loire, Auvergne-Rhône-Alpes, Bourgogne-Franche-Comté, Grand-Est, Hauts-de-France மற்றும் Normandy  ஆகிய மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'Pollens' எனப்படும் இந்த மகரந்த ஒவ்வாமை மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மிக தீவிரமாக ஏற்படுகிறது. காற்றில் கலக்கும் மகரந்த துகள்கள் கண் எரிவு, எரிச்சல், ஒவ்வாமை, சுசாசப்பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதனால் நீண்ட கால நோயுடையவர்கள் இந்த நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகின்றார்கள் எனவும், சிறியவர்களும் எளிதில் பாதிப்படைகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதுக்கும் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்