பாரஷூட் கட்டிக்கொண்டு - ஈஃபிள் கோபுரத்தில் இருந்து குதித்தவர்!
2 தை 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 19482
புதிய முயற்சிகள் எப்போதும் வரவேற்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கும். ஆனால் அது விபரீத விளையாட்டாக இருக்கும் பட்சத்தில்??!! இங்கே ஒருவர் பாரஷூட் கட்டிக்கொண்டு ஈஃபிள் கோபுரத்தில் இருந்து குதித்தார்... என்ன நடந்தது??!!
அவரின் பெயர் Franz Reichelt. பாரஷூட் கண்டுபிடிப்புகாலின் முன்னோடி என குறிப்பிடப்படுகிறது. விரைவில் ஈஃபிள் கோபுரத்தில் இருந்து குதித்து, அவருடைய சொந்த கண்டுபிடிப்பான பாரஷூட்டை வெற்றிபெறச்செய்து காட்டுவதாக 1912 ஆம் ஆண்டுக்கு முன்னர் அறிவித்தார். ஆனால் சம்பவம் இடம்பெற்றது பெப்ரவரி 1912 ஆம் ஆண்டு. பல போராட்டங்களுக்கு பின்னர் அவருக்கு ஈஃபிளில் இருந்து தனது கண்டுபிடிப்பை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
அன்று, பெப்ரவரி 4, 1912 ஆம் வருடம். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி. Franz Reichelt மற்றும் அவரது இரு நண்பர்கள், மகிழுந்து ஒன்றில் ஈஃபிள் கோபுரத்துக்கு வந்து சேர்ந்தனர். Franz Reichelt வரும்போதே பாரஷூட்டை அணிந்திருந்தார். ஈஃபிள் மேல் ஏறினார். 57 மீட்டர் உயரம் (187 அடி). கீழே காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பொதுமக்கள், நண்பர்கள் பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள்... அனைவரும் அந்த சாகசத்தை காண காத்திருந்தார்கள்.
குதித்தார். பாரஷூட் முழுதாக திறக்கவில்லை. 40 வினாடிகளில் தரையில் வந்து விழுந்தார். தலையில் அடிபட்டி, மண்டையோடு சிதைந்து, கை கால்கள் எலும்பு முறிவு ஏற்பட்டது. Necker மருத்துவமனைக்கு எடுத்துசெல்கையில் உயிர் பிரிந்துவிட்டது. பல பத்திரிகையில் அவரைப்பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டது. 'பாரஷூட் கண்டுபிடிப்புகளின் முன்னோடி!' என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முன்னெச்சரிக்கையாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இப்படி செய்தது முட்டாள் தனம் எனவும் விமர்சிக்கப்பட்டது.
Franz Reichelt, ஈஃபிளில் இருந்து குதிக்கும் காட்சி யூடியூப்பில் உள்ளது. மன தைரியம் உள்ளவர்கள் மாத்திரம் பார்க்கவும்!!