அல்லு அர்ஜுன்.. அட்லி பட அறிவிப்பு வெளியாகிறதா?

5 சித்திரை 2025 சனி 14:27 | பார்வைகள் : 403
அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கப் போகிறார் என்று கூறப்பட்ட நிலையில், நேற்று திடீரென அல்லு அர்ஜுன் சென்னை வந்திருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு பக்கம் அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், இன்னொரு பக்கம் அட்லி இயக்கத்தில் உருவான 'ஜவான்' திரைப்படமும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இந்த நிலையில், இரண்டு ரூ.1000 கோடி திரையுலக பிரபலங்கள் இணைந்து ஒரு படத்தை உருவாக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்று சென்னைக்கு அல்லு அர்ஜுன் வந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அட்லியுடன் பேசினார் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு, அன்றைய தினம் இந்த படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.