'குட் பேட் அக்லீ' டிரைலர் எதிர்கொள்ளும் நெகட்டிவ் விமர்சனங்கள் ஏன்?

5 சித்திரை 2025 சனி 14:30 | பார்வைகள் : 361
2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று தான் 'குட் பேட் அக்லீ'. அதற்கு முக்கிய காரணம் படத்தின் டீசர் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'குட் பேட் அக்லீ' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு இயக்குநராக இல்லாமல் ஒரு ரசிகனாக அஜித்தை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என்பதை படத்தின் டீசர் மற்றும் டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.
'விடாமுயற்சி' படத்தின் மோசமான தோல்விக்கு பிறகு அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லீ படத்தின் மூலமாக மீண்டும் வருகிறார். அதன்படி இப்படம், வரும் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. நேற்று குட் பேட் அக்லீ படத்தின் டிரைலர் வெளியானது. இந்த படத்தின் டிரைலரில் அஜித்துக்கு உச்சகட்ட உற்சாகத்தை அளித்துள்ளார். இதுவரையில் அஜித்தை இப்படியான கதைக்களத்தில் யாருமே அஜித்தை பார்த்திருக்க முடியாது. அவ்வளவு மாஸாக இருந்தது.
அஜித்தின் 'குட் பேட் அக்லீ' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், சில சினிமா விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் டிரைலரை விமரிச்த்துள்ளனர். அதில், அந்தணன், ஃபேமிலி ஆடியன்ஸ்களுக்கான படம் என்று சொன்னார்கள். ஆனால், டிரைலரை பார்க்கும் போது அப்படி இல்லை என்று தெரிகிறது. ஏதோ வேற்று கிரகவாசிகளை பார்ப்பது போன்று இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.
டிரைலரில் முதல் 30 வினாடிகளுக்கான பின்னணி இசை நன்றாக இருந்தது. ஆனால், அதன் பிறகான இசை படத்தின் காட்சிகளுடன் இணையவில்லை. மேலும், டிரைலர் கட் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு இருந்துள்ளது. காரணம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் உடன் தான் டிரைலர் இருந்துள்ளது. படத்தின் கதையை முற்றிலும் ஆராயவில்லை. இருந்த போதிலும் ரசிகர்களை கவரும் வகையிலான காட்சிகள் டிரைலரில் ஏராளமாகவே உள்ளன. அதோடு பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங்கை தீர்மானிக்கும் வகையில் தான் டிரைலரின் காட்சிகள் இருந்துள்ளது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என கூறியுள்ளார்.
ஒரு தரப்பினர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும் இன்னொரு தரப்பினர் தொடர்ந்து ட்ரைலர் பற்றி தங்களின் எதிர்மறை விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். இதையெல்லாம் கடந்து 'குட் பேட் அக்லீ' திரையரங்கில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.