Paristamil Navigation Paristamil advert login

மலைப்பிளவுகளுக்குள் விழுந்த இருவர் பலி!!

மலைப்பிளவுகளுக்குள் விழுந்த இருவர் பலி!!

6 சித்திரை 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 9566


பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட்டிருந்த இருவர் மலைப்பிளவுக்குள் விழுந்து பலியாகியுள்ளனர். நேற்று ஏப்ரல் 5, சனிக்கிழமை இச்சம்பவம் Haute-Savoie மலைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளை மலை என அழைக்கப்படும் Mont Blanc மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இருவரே பலியானதாக மலைப்பகுதிகளை பாதுகாக்கும் படைப்பிரிவான peloton de gendarmerie de haute montagne தெரிவித்துள்ளனர்.

குழுவாக இணைந்து பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தவர்களில் இருவர் கண்காணிப்பில் இருந்து விலகி, மலையில் இருந்து மலைவெட்டுப்பகுதி ஒன்றுக்குள் சறுக்கி விழுந்து உடனடியாகவே பலியாகியுள்ளனர். முற்பகல் 11.20 மணிக்கு அவர்கள் பலியானதாக அவசரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்