அமெரிக்காவுக்கு எதிராக வர்த்தக போர் : பிரித்தானிய பிரதமரை தொலைபேசியில் அழைத்த மக்ரோன்!!

6 சித்திரை 2025 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 1131
அமெரிக்கா அறிவித்துள்ள வரி அதிகரிப்பு தொடர்பாக பிரித்தானிய பிரதமரும் - பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனோனும் தொலைபேசியூடாக உரையாடியுள்ளனர்.
அமெரிக்காவின் இந்த வரி அதிகரிப்பினால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளும் இதில் விதிவிலக்கு இல்லை. இந்நிலையில், ஏப்ரல் 5, நேற்று சனிக்கிழமை இருவரும் தொலைபேசியூடாக உரையாடியதாகவும், இந்த வர்தகப்போரினால் யாரும் நன்மையடையவில்லை எனவும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்க்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு அமைப்பான UNCTAD இது தொடர்பில் தெரிவிக்கையில், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் 90% சதவீதமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.