தள்ளாடிய போலி ஈஃபிள்! - ஒரு சோக வரலாறு!!
1 தை 2017 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 19904
ஈஃபிள் கோபுரம் பிரான்சின் அடையாளம். அடேயப்பா என வாய் பிளக்க வைக்கும் அசாத்திய உயரம், அழகு... தொழில்நுட்பம். இதெல்லாம் நமக்கு தெரிந்ததுதான். ஒரிஜினல் எல்லா பக்கத்தாலும் ஹிட் அடித்தால்.. போலிகளுக்கு பஞ்சமே இருக்காது. ஈஃபிள் கோபுரம் போல் 'போலியான' கோபுரங்கள் உலகம் முழுவதும் எண்ணிக்கையில் 30 உள்ளன. இதோ... பக்கத்தில்... லண்டனில் ஒரு போலி கோபுரம்.. தள்ளாடி தள்ளாடி... தோல்வியில் முடிந்த கதையை பார்க்கலாம்!!
கோபரத்தின் பெயர் Watkin's Tower! அசப்பில் ஈஃபிள் போலவே இருக்கும். 1891 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்தார்கள். 358 மீட்டர்கள் உயரம் கொண்ட கோபுரமாக (ஈஃபிள் கோபுரத்தை விடவும் மிகப்பெரிது... பேராசை பாஸ்... ) ஆரம்பத்தில் இருந்தே 'எங்கயோ இடிக்குதே' என்ற குழப்பம் கட்டுமானிகளுக்கு இருந்துள்ளது. அடியில் இருந்து கோபுரம் எழும்பிக்கொண்டிருக்கையில், ஆட ஆரம்பித்துவிட்டது. அரைவாசி கோபுரத்தைக் கூட தொடவில்லை.. தள்ளாடி தள்ளாடி.. தளும்ப ஆரம்பித்துவிட்டது. ஒருவழியாக முக்கால் கோபுரம் வரை கொண்டு சென்று, 1896 ஆம் ஆண்டு திறந்து வைத்தார்கள். ஆனால்... ஆட்டமோ ஆட்டம்... 'குடிகார கோபுரம்' இப்படி தள்ளாடுகிறதே என பொதுமக்களிடையே புலம்பல்கள் ஏற்பட்டன.
பின்னர்... எதுக்குடா வம்பு என, 1907 ஆம் ஆண்டு கோபுரத்தை அகற்றிவிட்டார்கள். கோபுரம் தன் தலையை தொடாமலே உருக்குலைந்து போனது. கோபுரத்தில் கால்கள் போதிய அகலமாக இல்லை என பின்னர் தெரிவிக்கப்பட்டது. போலிகள் ஒருபோதும் வெல்வதில்லை.