களைகட்டியது ராமநவமி கொண்ட்டாட்டம்: அயோத்தியில் குவிந்த பக்தர்கள்

6 சித்திரை 2025 ஞாயிறு 12:08 | பார்வைகள் : 526
ராம நவமியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
நாடு முழுவதும் ராம நவமி இன்று (ஏப்ரல் 06) விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனால் அயோத்தியில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ராம நவமியை முன்னிட்டு, ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளமானோர் சரயு நதியில் புனித நீராடினர். பக்தர்களுக்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ராம நவமி கொண்டாட்டங்களை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் பதற்றம் நிறைந்த ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், கிரிதி, ஹசாரிபாக் போன்ற மாவட்டங்களில் ராம நவமி கொண்டாட்டம் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.