Paristamil Navigation Paristamil advert login

நியூசிலாந்து கிரிக்கெட்டில் புதிய வரலாறு எழுதிய வீரர்…! ஜாம்பவான்கள் கூட செய்யாத சாதனை

நியூசிலாந்து கிரிக்கெட்டில் புதிய வரலாறு எழுதிய வீரர்…! ஜாம்பவான்கள் கூட செய்யாத சாதனை

6 சித்திரை 2025 ஞாயிறு 05:29 | பார்வைகள் : 367


பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இருமுறை தொடர்ச்சியாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பென் சியர்ஸ் வரலாறு படைத்துள்ளார்.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் (Ben Sears) 34 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் சியர்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதன்மூலம் அவர் தொடர்ச்சியாக இருமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

நியூசிலாந்தின் ஜாம்பவான் வீரர்களான ஷான் பாண்ட், டேனியல் வெட்டோரி ஆகியோர் கூட இந்த சாதனையை செய்ததில்லை.  

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்