Paristamil Navigation Paristamil advert login

மாபெரும் நகைச்சுவை மேதை - Louis de Funès!!

மாபெரும் நகைச்சுவை மேதை - Louis de Funès!!

29 மார்கழி 2016 வியாழன் 13:30 | பார்வைகள் : 19872


நகைச்சுவை மாபெரும் கலை. சிரிக்க வைப்பதென்பது அனைவருக்கும் கை கூடி விடாது. பிரெஞ்சு தேசத்தில் ஒருவர் இருந்தார்... பார்த்ததும் 'பச்சக்' என பற்றிக்கொள்ளும் சிரிப்பு! பிரெஞ்சு தேசத்தின் சந்திரபாபு! 
 
முழுப்பெயர் Louis Germain David de Funès de Galarza, Hauts-de-Seine இல் 1914 ஆம் ஆண்டு, ஜூலை 31ம் திகதி பிறந்தார். பிரான்சின் மிகப்பெரிய, மிகமுக்கியமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர். தன் முக பாவனைகளாலும், உடல்மொழியினாலும், வேகமான வசன உச்சரிப்பினாலும் தனி கவனம் பெற்றவர்.
 
தமிழில் கவுண்டமணி செந்தில் ஜோடி போல், இவர்... நகைச்சுவை நடிகர்  André Bourvil உடன் சேர்ந்து செய்த திரைப்படங்கள் அனைத்தும் அதகளம். இயக்குனர்  Jean Girault உடன் இணைந்து வேலை பார்த்தால்... வசூல் நிச்சயம் இரட்டிப்பாகும்!! 
 
மேல் குறிப்பிட்ட இருவரும் இணைந்து இயக்கிய L'Avare திரைப்படம், பிரெஞ்சு சினிமாவின் தவிர்க்கமுடியாத நகைச்சுவை படம். 1980 ஆம் ஆண்டில், 18 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்து பட்டையைக்கிளப்பியது!! 
 
பிரெஞ்சு தெரியாத நாடுகளில் எல்லாம் ஆதிக்கம் செலுத்தினார் Louis de Funès. கிரீஸ், ஹங்கேரி, செக்கோஸ்லோவாகியா, பல்கேரியா, போலாந்து, ஜேர்மனி, ஸ்பைன், துருக்கி, ருமேனியா... என தேசம் விட்டு தேசம் வீசும் நகைச்சுவை அலை!! 
 
ஒரே ஒரு அமெரிக்க திரைப்படத்தில் நடித்தார். 
The Mad Adventures of Rabbi Jacob என பெயரிடப்பட்ட அப்படத்துக்கு 'கோல்டன் குளோப்' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1968ஆம் ஆண்டு ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. பிரெஞ்சு தேசத்தின் மிகப்பிடித்த நடிகராக Louis de Funès தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதன் முடிவு சொல்லியது. 
 
பல திரைப்படங்கள், மேடை நாடகங்களின் 130க்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்கள் ஏற்று நடித்தார். அத்தனையும் அனல் பறக்கும். முகத்தை சுருக்கி, வளைத்து நெளித்து சில நொடிகளில் பல்வேறு 'எக்ஸ்பிரஷன்ஸ்' செய்து அசரடிப்பார்!!
 
யூடியூப்பில் கொட்டிக்கிடக்கின்றன இவரது திரைப்படங்கள் மற்றும் காணொளிகள். மனசு இறுக்கத்தில் இருந்தால், அதை போக்க சரியான மருந்து இவர் காணொளிகள். பாருங்களேன்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்