Paristamil Navigation Paristamil advert login

கஜகஸ்தானில் அரியவகை தாதுக்கள் படிவங்கள் கண்டுபிடிப்பு

கஜகஸ்தானில் அரியவகை தாதுக்கள் படிவங்கள் கண்டுபிடிப்பு

6 சித்திரை 2025 ஞாயிறு 06:06 | பார்வைகள் : 582


மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளிலொன்றான கஜகஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரிய தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கஜகஸ்தான் நாட்டில் கரகண்டா பிராந்தியத்திற்குள் உள்ள குய்ரெக்டிகோல் என்ற பகுதியில் இந்த அரிய வகை தாது படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதை அந்நாட்டின் தொழில் மற்றும் கட்டுமான அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த பிராந்தியத்தில் சுமார் ஒரு மில்லியன் தொன் அரிய உலோகங்கள் மற்றும் தாதுக்களின் படிவங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நவீன மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களை உருவாக்க இந்த தாதுக்கள் முக்கியமாகத் தேவைப்படுகிறது.

குய்ரெக்டிகோல் மட்டுமின்றி பெரிய ஜானா கஜகஸ்தான் என்ற பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 300 மீட்டர் ஆழத்தில் 20 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான அரிய உலோகங்களின் படிவங்கள் இருப்பதாகவும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்த அரிய உலோகங்கள் மின்சார வாகனங்கள், காற்றாலை கருவிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்களுக்கு இன்றியமையாதவையாக உள்ளன. இதன் தேவை சர்வதச அளவில் அதிகரித்து வருகிறது.

தற்போது சீனா மட்டுமே இதில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக கஜகஸ்தானின் இந்த கண்டுபிடிப்பு இருக்கிறது.

அதேநேரம் கஜகஸ்தானிடம் இந்த அரிய உலோகங்களை வெட்டி எடுக்கத் தேவையான தொழில்நுட்பம் இல்லை. மேலும், பிரித்தெடுத்தல் உள்ளிட்ட இதர பணிகளுக்கான உட்கட்டமைப்பும் இல்லை.

இதனால் கஜகஸ்தான் அரசு வெளிநாட்டு முதலீட்டைக் கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.   

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்