Paristamil Navigation Paristamil advert login

இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறிய அகதிகளை வெளியேற்ற நடவடிக்கை

இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறிய அகதிகளை வெளியேற்ற நடவடிக்கை

6 சித்திரை 2025 ஞாயிறு 06:13 | பார்வைகள் : 777


இத்தாலியில் சட்ட விரோதமாக குடியேறிய அகதிகளை திருப்பி அனுப்ப இத்தாலி அரசாங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.

ஆபிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுகின்றனர்.

அவர்களில் லிபியா, துனிசியா உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மை வகிக்கின்றனர்.

இந்தநிலையில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள அகதிகளை அவர்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்ப இத்தாலி அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் சுமார் 3,300 அகதிகள் சட்ட விரோதமாக குடியேறியது தெரிய வந்துள்ளது. எனவே அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்ப இத்தாலி வெளியுறவு அமைச்சரகம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தாஜானி தலைமையில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான கூட்டுக் குழு கூடியது.

துணை வெளியுறவு அமைச்சர் எட்மண்டோ சிரியெல்லி மற்றும் உள்துறை அமைச்சர் மேட்டியோ பியான்டெடோசி ஆகியோரும் அதில் கலந்து கொண்டனர்.

இந்த குழுவில் இத்தாலிய உள்துறை அமைச்சர் பங்கேற்று, இத்தாலிய அரசாங்கம் இந்த திட்டத்திற்கு அளிக்கும் முன்னுரிமையைக் காட்டியது இதுவே முதல் முறை என்று ஐ.நா. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்