Paristamil Navigation Paristamil advert login

நாட்டின் பல நகரங்களில் துப்பாக்கிச்சூடு பதிவு!!

நாட்டின் பல நகரங்களில் துப்பாக்கிச்சூடு பதிவு!!

6 சித்திரை 2025 ஞாயிறு 10:00 | பார்வைகள் : 1489


கடந்த 48 மணிநேரத்தில் நாடு முழுவதும் பல்வேறு துப்பாக்கிச்சுட்டு சம்பவங்கள் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. பலர் காயமடைந்துள்ளனர்.

Nîmes நகரில் இடம்பெற்ற துப்பக்கிச்சூட்டில் 48 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவரது மகிழுந்தில் 7.62 மி.மீ கலிபர் குண்டுகள் பாய்ந்த 16 அடையாளங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Grenoble நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் ஒன்றின் போது ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

Vaujours (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்தில் 7.65 மி.மீ கலிபர் வகை துப்பாக்கிச் சன்னங்களை காவல்துறையினர் மீட்டனர். Renault Mégane மகிழுந்து ஒன்றில் பயணித்தவர் நோக்கி இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களில் Noisy-le-Sec பகுதியில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. அதிஷ்டவசமாக அதில் எவரும் காயமடையவில்லை. ஆயுததாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Grenoble நகரில் துப்பாக்கிச்சூட்டும், Vaujours (Seine-Saint-Denis) நகரில் ஒரு துப்பாக்கிச்சூடும் பதிவானது. பின்னர் Bordeaux நகரின் Place de la Bourse பகுதியிலும் ஒரு துப்பாக்கிச்சூடு பதிவானது.

இவை அனைத்தும் கடந்த 48 மணிநேரத்தில் இடம்பெற்றவையாகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்