பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரின் அல்ஜீரியா பயணம் இரு நாடுகளுக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்குமா?

6 சித்திரை 2025 ஞாயிறு 18:00 | பார்வைகள் : 904
இன்று 6 Avril பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட்டின் (Jean-Noël Barrot ) அல்ஜீரிய பயணம், பிரான்ஸ்-அல்ஜீரிய உறவுகளில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாக அதிகரித்த இராஜதந்திர பதட்டங்களுக்கு மத்தியில், அல்ஜீரியப் பிரதமர் அகமது அட்டாஃபின் அழைப்பின் பேரில் அமைந்த அதிகாரப்பூர்வ பயணமானது, நல்லிணக்கத்திற்கான வலுவான சமிக்ஞையாகக் கருதப்படுகிறது. பல சிக்கல்களுக்கு அப்பால், இந்தப் பயணம் பல அல்ஜீரியர்களுக்கு உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோ இறையாண்மையின் கீழ் மேற்கு சஹாராவுக்கான சுயாட்சித் திட்டத்திற்கு இம்மானுவேல் மக்ரோன் தனது ஆதரவை வழங்கிய கடந்த ஜூலை மாதத்திலிருந்து பாரிஸ் மற்றும் அல்ஜீரியர்களது இடையேயான உறவுகள் கணிசமாக மோசமடைந்து இருந்தது. இதனால் கோபமடைந்த அல்ஜீரியா, தனது தூதரை திரும்ப அழைத்தது.
கடந்த பிப்ரவரியில் மல்ஹவுஸில் (Mulhouse) நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டமையால் நெருக்கடி உச்சத்தை எட்டியது. சமீபத்தில் மார்ச் 27 அன்று பிராங்கோ-அல்ஜீரிய எழுத்தாளர் பவுலெம் சான்சலுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை பிரான்ஸில் விதிக்கப்பட்டது என்பன குறிப்பிடத்தக்கவை.
எனவே, தனது விஜயத்தின் போது, ஜீன்-நோயல் பரோட் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு திட்டத்தை நிறுவ முயற்சிக்க வேண்டும். நீதித்துறை, பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற அனைத்து துறைகளிலும் மீண்டும் இணைந்து செயல்படுவது என்பது அவ்வளவு சுலபமனது அல்ல.
தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் வருகை தரவுள்ளனர், குறிப்பாக நீதி அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் வருகை. வெளிப்படையாக, அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க நேரம் எடுக்கும். ஆனால் பாரிஸ் மற்றும் அல்ஜீரியர்களது இடையே நீடிக்கும் ஒரு நெருக்கடி யாருக்கும் சாதகமாக இருக்காது என்று ஒரு அரசியல் வல்லுநர் கூறுகிறார். பிரான்சில், பத்து மக்களில் ஒருவர், ஏதோ ஒரு வகையில், அல்ஜீரியாவுடன் இணைக்கபட்டுள்ளனர்.