இலங்கை வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது

6 சித்திரை 2025 ஞாயிறு 11:47 | பார்வைகள் : 869
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 65.76 மில்லியன் ரூபா மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் கையிருப்புடன் இந்தியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இன்று (06) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
29 வயதான இந்த இந்திய நாட்டவர் இன்று அதிகாலை 2.14 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அவர் எடுத்துச் சென்ற சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 644 கிராம் கோகோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண் அளித்த தகவலின் அடிப்படையில், கொழும்பின் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில், போதைப்பொருளை ஏற்கத் தயாராக இருந்த உள்ளூர் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மாலபே பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் இன்று (06) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர், மேலும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட உள்ளது.