Paristamil Navigation Paristamil advert login

Square des Batignolles - பரிசில் பார்க்கவேண்டிய பூங்கா!

Square des Batignolles - பரிசில் பார்க்கவேண்டிய பூங்கா!

28 மார்கழி 2016 புதன் 13:30 | பார்வைகள் : 20071


விடுமுறை முடிவதற்கு இதோ.. சில நாட்களே உள்ளன... சோம்ஸ் - எலிசேக்கு கண்டிப்பாக சென்று வந்திருப்பீர்கள்... இதோ... 17ம் வட்டாரத்தில் ஒரு பூங்கா! பொடிநடையாய் ஒரு தடவை போய் வாருங்கள்!
 
பரிசின் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள மிகப்பெரிய பூங்கா இது. Rue Cardinet இல் இருந்து Rue des Moines வரையான, 16,615 சதுர மீட்டர்கள் ( கிட்டத்தட்ட 4 ஏக்கர்கள்) இட அளவினை கொண்டுள்ளது. Batignolles லத்தீன் மொழியில் இருந்து மருவிய வார்த்தை. என்றால்...  சிறிய பண்ணை என அர்த்தமாம். ஆங்கில பூங்கா 'ஸ்டைலில்' வடிவமைத்துள்ளார்கள். 
 
செயற்கையாக வடிவமைக்க குளம் ஒன்று இங்கு உள்ளது. பார்த்தால் இயற்கையாய் தோன்றியது போல் அத்தனை அழகாக இருக்கும். புற்தரைகளும் மரங்களும் அழகை மேலும் மெருகூட்டுகின்றன. 
 
பூங்காவில், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சிலைகள் பல கதைகள் சொல்லுகின்றன. உலக நாடுகளில் இருந்து பல முக்கிய வரலாற்று தடத்தினை சிற்பமாக வடித்து வைத்துள்ளார்கள். அழகோடு பல அறிவியல் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். 
 
"The taste of water, the taste of breadAnd the PerlimpinpinIn the Square des Batignolles!.." என பிரெஞ்சு பாடகர் ஒருவர் இந்த பூங்கா குறித்து பாடல் ஒன்று எழுதியுள்ளார். பின்னர் அவருக்காக இங்கு  ஒரு சின்னம் அமைக்கப்பட்டது. 
 
காலை 8 மணியில் இருந்து, இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும் இந்த பூங்காவுக்கு மாலை நேரங்களில் ஒரு 'விஸிட்' அடிக்கலாமே...??!! முகவரி : 144Bis Rue Cardinet, 75017 Paris,
+33 1 44 69 17 17

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்