எகிப்த் சென்றடைந்த ஜனாதிபதி மக்ரோன்.. ‘காஸா’ விடயத்தில் தீவிரம்..!!

7 சித்திரை 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 856
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக எகிப்த்துக்கு சென்றடைந்துள்ளார். காஸா பகுதி தொடர்பாக கலந்துரையாடுவதே இந்த பயணத்தின் முழுமையான நோக்கமாகும்.
நேற்று ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை மாலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் விமானம் Cairo இனைச் சென்றடைந்தது. 48 மணிநேர சுற்றுப்பயணமாக அவர் அங்கு பயணித்துள்ளார். இன்று ஏப்ரல் 7, திங்கட்கிழமை காலை எகிப்த்தின் ஜனாதிபதி Abdel Fattah al-Sisi இனை சந்திக்க உள்ளார். எகிப்த்தின் தலைநகர் Cairo இல் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது.
அதன் பின்னர் இன்று நண்பகல் எகிப்தின் மன்னரான இரண்டாம் ஜோர்தன் அப்துல்லாவைச் சந்திக்க உள்ளார். காஸாவின் நிலமைகள் குறித்து உரையாட உள்ளனர்.
“காஸா பிரச்சனையை தீர்ப்பதில் எகிப்த்-பிரான்ஸ் முழுமையான ஈடுபாட்டோடு இருக்கிறது” என எலிசே வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை மாலை அவர் அங்கிருந்து பரிசுக்கு திரும்புகிறார்.