கோடைகாலம் : சிறுவர்கள் நீரில் மூழ்கி இறப்பதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம்!!

7 சித்திரை 2025 திங்கள் 08:00 | பார்வைகள் : 1190
சென்ற 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் நீரில் மூழ்கி இறந்தவர்களில் 32% சதவீதமானவர்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த பிரச்சாரங்கள் இடம்பெற்றன. இவ்வருடத்தில் பரிஸ் மற்றும் அதன் புறநகர் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு நீச்சல் தடாகங்கள் திறக்கப்பட உள்ளன. குறிப்பாக சென் நதியில் மூன்று நீச்சல் தடாகங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளன.
இநிலையில், ஈஸ்ட்டர் விடுமுறை மற்றும் கோடை விடுமுறையின் போது சிறுவர்கள் நீரில் மூழ்குவதை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டு ஜூன் தொடக்கம் ஓகஸ்ட் வரையான மாதஙக்ளில் மட்டும் 983 நீரில் மூழ்கி விபத்துக்கள் இடம்பெற்றிருந்தன என தெரிவிக்கப்படுகிறது.