பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட மூவர் கைது!!!

7 சித்திரை 2025 திங்கள் 07:29 | பார்வைகள் : 852
பாரிஸில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு துணை இயக்குநரகத்தின் (SDAT) அளித்த தகவலின் அடிப்படையில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி வன்முறை நடவடிக்கையைத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று ஆண்கள் இந்த வாரம் பிரான்சின் வடக்குப் பகுதியில் கைது செய்யப்பட்டு, ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டப்பட்டதாக, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து (Pnat) அறிக்கை அளித்திருந்தது.
19 முதல் 24 வயதுக்குட்பட்ட இந்த மூன்று ஆண்கள், ஏப்ரல் 2 செவ்வாய்க்கிழமை வடக்கில் உள்ள Dunkerque பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். அதே பகுதியில் வசித்த இந்த இளைஞர்களின் உறவினர் ஒருவர், அவர் ஏதாவது குற்ற செயலில் ஈடுபடக்கூடும் என்று அஞ்சி, கடந்த வாரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இந்த இளைஞர்களில் முதலாவதாக கைது செய்யப்பட்ட நபர், வெடிக்கும் சாதனங்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தக்கூடிய வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பெல்ட்டை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த இளைஞன் யூத சமூகத்தைத் தாக்க விரும்பியதாக சந்தேகிக்கப்படுகிறது.
பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை, போலியான துப்பாக்கியை அவருக்கு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். திட்டமிடப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்திருந்தும், அதைப் புகாரளிக்காமல் இருந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்றாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை, அவர்களில் இருவர் வெடிக்கும் பொருட்கள் அல்லது வெடிமருந்துகள்" வைத்திருந்ததாக"குற்றவியல் பயங்கரவாத சதி" எனும் குற்றச்சாட்டு தேசிய பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தால் (association de malfaiteurs terroriste criminelle) சுமத்தப்பட்டது. அவர்கள் விசாரணைக்கு முன்பு காவலில் வைக்கப்படு இருந்தனர். மூன்றாவது சந்தேக நபர் "பயங்கரவாத குற்றத்தைப் புகாரளிக்கத் தவறியதற்காக" குற்றம் சாட்டப்பட்டு நீதித்துறை மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டார்.