Paristamil Navigation Paristamil advert login

ட்ரம்பின் வரி விதிப்பால் தாறுமாறாக எகிறும் iPhone விலைகள்: எச்சரிக்கும் நிபுணர்கள்

ட்ரம்பின் வரி விதிப்பால் தாறுமாறாக எகிறும் iPhone விலைகள்: எச்சரிக்கும் நிபுணர்கள்

7 சித்திரை 2025 திங்கள் 09:29 | பார்வைகள் : 281


ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விடுதலை நாள் வரி விதிப்பால் iPhone விலைகள் தாறுமாறாக அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

iPhone-ன் சமீபத்திய மொடலைத் தயாரிப்பதற்கான செலவு 580 டொலரில் இருந்து 850 டொலராக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்நுட்ப ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனை சீனாவில் உற்பத்தி செய்கிறது.

ட்ரம்பின் விடுதலை நாள் வரி விதிப்பு என்பது சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 54 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தயாரிப்பு செலவு அதிகரிப்பை ஈடு செய்ய, ஆப்பிள் நிறுவனம் தங்கள் iPhone விலையை இனி உயர்த்தும்.

இதனால், 256GB iPhone 16 Pro விலை 1100 டொலரில் இருந்து 3500 டொலர் என தாறுமாறாக உயர வாய்ப்புள்ளது.

வரி விதிப்பு என்பது வெளிநாட்டு பொருட்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாகவே ஜனாதிபதி ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

ஆனால் ஆப்பிள் நிறுவனம் அதன் சாதனங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

மட்டுமின்றி, அமெரிக்க மண்ணில் ஐபோன்களை தயாரிப்பதற்கு சிக்கனமான வழி இல்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் ஐபோன் உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுவது என்பது சாத்தியப்படாத மிகப்பெரிய முயற்சி என்றே கூறப்படுகிறது.

தற்போது சீனாவில் அசெம்பிளிங் செலவு சுமார் 30 டொலராகும், ஆனால் உற்பத்தி அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டால் இது பத்து மடங்கு உயரும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்