ஜேர்மனியில் வீடொன்றிலிருந்து வந்த அவசர அழைப்பு-பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

7 சித்திரை 2025 திங்கள் 09:33 | பார்வைகள் : 274
ஜேர்மனியில் வீடொன்றிலிருந்து வந்த அவசர அழைப்பையடுத்து அங்கு விரைந்துள்ளனர் பொலிசார்.
ஆனால் அவர்கள் அந்த வீட்டுக்கு வந்தபோது, அங்கு இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஜேர்மனியின் Rhineland-Palatinate மாகாணத்திலுள்ள Weitefeld என்னும் நகரத்திலுள்ள ஒரு வீட்டிலிருந்து பெண்ணொருவர் அவசர உதவி கோரி பொலிசாரை அழைத்துள்ளார்.
அதிகாலை 3.45 மணியளவில் வீட்டில் அடிதடி நடப்பதாகக் கூறி அந்தப் பெண் அழைத்ததைத் தொடர்ந்து பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.
அவர்கள் அங்கு சென்றடைந்தபோது, அந்த வீட்டுக்குள், முறையே 47 மற்றும் 44 வயதுடைய இரு பெண்களும், 16 வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்துகிடந்துள்ளார்கள்.
அவர்கள் கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்த நிலையில், அது குடும்பத் தகராறால் ஏற்பட்ட சம்பவமாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
பொலிசார் அங்கு வரும்போது அந்த பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் ஒருவர் மீது சந்தேகம் உருவாகியுள்ளது.
2,000 பேர் வாழும் அந்த நகரத்திலும், அருகிலுள்ள கிராமங்களிலும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் தொடர்ந்து குற்றவாளியை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.