Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் சாக்லெட் உட்கொள்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் சாக்லெட் உட்கொள்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

7 சித்திரை 2025 திங்கள் 09:42 | பார்வைகள் : 302


கனடாவில் சாக்லெட் உட்கொள்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டோனி பண்டக்குறியைக் கொண்ட சோகலோனிலி சாக்லேட்களில் சிறு கற்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரு வகை சாக்லேட்களுக்கு மீளப்பெறல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கனடிய உணவு பரிசோதனை முகவம் (CFIA) வியாழக்கிழமை வெளியிட்ட தேசிய மீளப்பெறல் அறிவிப்பில், கீழ்க்கண்ட சாக்லேட் பொருட்களை பயன்படுத்த வேண்டாம், விற்க வேண்டாம்.

பரிமாற வேண்டாம் அல்லது பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

180 கிராம் எடையுடைய டோனி சொகலோனி டார்க் சாக்லெட் ஆல்மன்ட் சீ சால்ட் பார்கள் (Tony’s Chocolonely Dark Chocolate Almond Sea Salt bars)

180 கிராம் எடையுடைய டோனி சொகலோனி எவிரிதிங் பார்கள் Tony’s Chocolonely Everything Bars என்பனவே இவ்வாறு சந்தையிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து முகவர் நிறுவனமும் (FDA) இதே சாக்லேட் வகைகளுக்கு மீளப்பெறல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்