வடகொரியாவில் ஆறு ஆண்டுகளில் பின் மரதன் போட்டி

7 சித்திரை 2025 திங்கள் 10:11 | பார்வைகள் : 1940
வடகொரியாவில் ஆறு ஆண்டுகளில் பின்னர் முதன் முறையாக வடகொரியா பியோங்யாங்கில் சர்வதேச மரதன் போட்டியை நடத்தியது.
கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் அதன் எல்லைகளை பெருமளவில் மூடியுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் சுமார் 200 வெளிநாட்டு ஓட்டப்பந்தய வீரர்கள் போட்டியில் பங்கெடுத்தனர்.
சீனா, ருமேனியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க வருகை தந்ததாக அரசு ஊடகமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் மற்றும் ரோடாங் சின்முன் நேற்று செய்தி வெளியிட்டன.
1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாரத்தான், அதன் நிறுவனத் தலைவர் கிம் இல் சுங்கின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது.
இந்தப் பந்தயம் கடைசியாக 2019 இல் நடைபெற்றதில் 950 வெளிநாட்டினர் பங்கேற்றனர்.
அதன் பின்னார் 2020 ஆம் ஆண்டு, கொவிட்-19 தொற்றுநோய் தாக்கியபோது, வட கொரியா எல்லைகளை மூடி தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1