குழு மோதலில் இளைஞன் வெட்டிக்கொலை!!

7 சித்திரை 2025 திங்கள் 10:15 | பார்வைகள் : 807
குழு மோதலில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் Chambéry (Savoie) நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்று ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் இரு குழுக்களிடையே பெரும் மோதல் ஏற்பட்டது. பத்துக்கும் மேற்பட்டோர் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதலில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அதேவேளை, மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.