யாழில் பசுவொன்று 3 கன்றுகளை ஈன்ற அரிய சம்பவம்
7 சித்திரை 2025 திங்கள் 10:21 | பார்வைகள் : 7772
யாழ். வடமராட்சியில்பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
வடமராட்சி - உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை சனிக்கிழமை (5) ஈன்றுள்ளது.
ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகின்றது.
இரண்டு நாம்பன், ஒரு பசுக் கன்று ஈன்றுள்ளது. மூன்று கன்றுக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan