அட்லி பட வாய்ப்பை பெற்ற இசையமைப்பாளர்..!

7 சித்திரை 2025 திங்கள் 13:10 | பார்வைகள் : 188
இசையமைப்பாளர் சாய் அபிநயங்கர் இசையமைத்த திரைப்படம் இன்னும் ஒன்று கூட வெளிவராத நிலையில், அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகயிருக்கும் படத்தில் இசையமைப்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் ’பென்ஸ்’ என்ற திரைப்படத்தில் தான் சாய் அபிநயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது சாய் அபிநயங்கர் சூர்யா நடிப்பில் உருவாகும் 45-ஆவது படத்திலும் இசையமைத்து வருகிறார். அதுமட்டுமின்றி, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் நான்காவது படத்திலும் இவர் தான் இசையமைப்பாளராக இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்திற்கும் சாய் அபிநயங்கர் தான் இசையமைப்பாளராக இருப்பார் என்றும், இது குறித்து அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால், அனிருத்துக்கு இணையாக சாய் அபிநயங்கர் முன்னணி இசையமைப்பாளராக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அட்லி - அல்லு அர்ஜுன் படத்தின் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.