Cirque d'hiver - சாகச நிகழ்ச்சிகள் பார்க்கலாம் வாங்க!

25 மார்கழி 2016 ஞாயிறு 11:47 | பார்வைகள் : 21230
நாடு முழுவதும் எத்தனையோ சாகச அரங்குகள் இருக்கின்றன. 'சர்கஸ்' நிகழ்ச்சிகள் வழக்கொழியாமல் காலத்துக்கேற்றவாறு மெருகேற்றப்பட்டு, மேடையேற்றப்பட்டு வருகின்றன. இதோ இன்றைய பிரெஞ்சு புதினத்தில் 1650 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பாக்கக்கூடிய மிகப்பெரிய Cirque d'hiver 'சர்கஸ்' அரங்கு குறித்து பார்க்கலாம்.
மாவீரன் மூன்றாம் நெப்போலியனால், டிசம்பர் 11ம் திகதி 1852ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது இந்த மாபெரும் அரங்கு. கட்டிடத்தின் வெளிப்புற தோற்றமே அதன் புராதனத்தை பறைசாற்றும். வெறுமனே சர்கஸ் நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல், இசை நிகழ்ச்சிகள் 'பேஷன் ஷோ'க்கள், இன்னபிற கலை நிகழ்ச்சிகள் என எப்போதும் களை கட்டும்! குறிப்பாக Turkish wrestling ஷோ, ஹிட்டோ ஹிட்டு!!
பரிசுக்குள் இருக்கும் மிகப்பெரிய அரங்குகளில் இது முக்கியமானது. பத்தகலோன் அரங்கை விடவும் மிகப்பெரிது. 1650 பேர் ஒரே சமையத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிடலாம் என்பது இங்கு பெரும் சிறப்பு!!
இந்த விடுமுறையில் ஒரு நிகழ்ச்சி பார்த்துவிட்டுத்தான் வாங்களேன்!!
தொடர்புகளுக்கு - Cirque d'hiver de Paris, 110 Rue Amelot, 75011 Paris
தொலைபேசி - 01 47 00 28 81