காஸா யுத்தத்தில் ஹமாசுக்கு எந்த பங்கும் இல்லை! - ஜனாதிபதி மக்ரோன்!!

7 சித்திரை 2025 திங்கள் 13:12 | பார்வைகள் : 564
காஸாவில் இடம்பெறும் யுத்தத்தில் ஹமாஸ் அமைப்புக்கு எந்த கதாப்பாத்திரமும் இல்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இரு நாட்கள் சுற்றுப்பயணமாக எகிப்த்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு வைத்து இதனைத் தெரிவித்தார். இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கு எந்த வேலையும் இல்லை. ஹமாஸ் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பு. அது அங்கீகரிக்கப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை!' என மக்ரோன் தெரிவித்தார்.
எகிப்த் ஜனாதிபதி Abdel Fattah al-Sisi இனைச் சந்தித்த ஜனாதிபதி மக்ரோன் இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் தொடர்பில் கலந்துரையாடினார். பின்னர் இருவரும் இணைந்த ஊடக சந்திப்பினை மேற்கொண்டனர். அதன் போதே இதனை அவர் குறிப்பிட்டார்.