ராமராஜன் - நளினி மீண்டும் இணைந்துவிட்டார்களா?

7 சித்திரை 2025 திங்கள் 13:11 | பார்வைகள் : 259
நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை நளினி ஆகிய இருவரும் விவாகரத்து பெற்று 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது மீண்டும் இருவரும் இணைந்து விட்டதாகவும், அவர்களது பெற்ற பிள்ளைகள் அவர்களை இணைத்து வைத்ததாகவும் ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திரையுலகினரை பற்றிய தகவல் என்றால் சமூக வலைதளங்களில் வதந்தி மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலைதான். இந்த நிலையில், "ராமராஜன், நளினி இணைந்து விட்டார்கள்" என்ற வதந்திக்கு நடிகர் ராமராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
"நடக்காத ஒரு விஷயத்தை ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. நானும் நளினியும் இணைந்து விட்டோம் என்பதில் உண்மை இல்லை. இனிமேல் நடக்கவே முடியாத ஒரு விஷயத்தை இட்டுக்கட்டி பேசுவதை என்னால் ஏற்க முடியவில்லை.
நாங்கள் இருவரும் பிரிந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. தனியாக நான் வாழ பழகிக் கொண்டேன். இத்தகைய வதந்திகளால் எனது மனமும், நளினியின் மனமும் துயரம் அடைகிறது என்பதை வதந்தி கிளப்புவோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் பிள்ளைகள் இந்த வதந்திகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
நளினியுடன் எல்லாம் முடிந்துவிட்டது. இனி சேர்வதற்கு ஒன்றுமில்லை. அது நடக்காத காரியம். எனவே, தயவுசெய்து இப்படிப்பட்ட வதந்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நளினி மற்றும் ராமராஜன் இணைந்து விட்டதாக வெளியாகி வரும் செய்தி முற்றிலும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.