Paristamil Navigation Paristamil advert login

தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார்; சீமான் பேச்சு

தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார்; சீமான் பேச்சு

7 சித்திரை 2025 திங்கள் 20:13 | பார்வைகள் : 254


தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலை. நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது;

பாரதியை விடவா ஒரு புலவன் இருக்கிறான். எல்லா மொழிகளையும் கற்றான் பாட்டன் பாரதி. யாம் அறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம் என்றான். ஆங்கிலம் படிக்கிறவனுக்கு ஒண்ணு சொன்னான் பாரு. 1926ல் செத்து போய்ட்டான்.

ஆங்கிலம், ஆங்கிலம் அறிவு என்று பேசுறே? இயேசு பிறந்த 500 ஆண்டுகளுக்கு பிறகு, உருவான மொழி ஆங்கிலம். இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழின் தொன்மை இலக்கண நூல் தொல்காப்பியம் இருக்குது. உருவாகவில்லை, அது இருக்குது.

என்ன, ஆங்கிலத்தில் நீ சிறப்பு வச்சிருக்கே? என் மொழியை எடுத்திட்டா உனக்கு சொல் இல்லை. 500க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள், உயிர்ச்சொற்கள் நான் போட்டது உனக்கு. என் உடன் ஒரு S போட்டால் sudden. என்னுடைய பேச்சு அதன் உடன் ஒரு S சேர்த்தால் speech


என்னுடைய பஞ்சு, ஒரு S போட்டா ஸ்பான்ஜூ. என்னுடைய கொல், உன் kill. என்னுடைய கட்டுமரம் உன்னுடைய கட்டுமறான். என்னுடைய நாவாய், உன்னுடைய navy. என்னுடைய கலாசாரம், உன்னுடைய culture. உனக்குன்னு என்ன இருக்குது?

நான் போட்ட பிச்சையில் உருவாகிட்டு, நான் தான் பெரிய இன்டலிஜென்ட்டுன்னு, போடா... அங்கிட்டு போடா, சும்மா பேசிகிட்டு. தம்பி.. உலகத்தில் எல்லோரும் அவரவர் தாய் மொழியில் பேசுகிறார்கள். தமிழர்கள் நாங்கள் அந்த மொழிகளின் தாய் மொழியில் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

இந்த நாட்டின் பிரதமர் மோடி அவர்கள், உலகம் முழுக்க செல்கிறார், என்ன சொல்கிறார் என்று கேளு. உலகின் முதல்மொழி தமிழ் எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை. இந்திய மொழிகளின் தொன்மையை தமிழில் இருந்து அறியலாம்.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் தமிழை கற்றுக் கொள்ள பேரார்வம் கொண்டு வருகிறார்கள். இதை நான் சொல்லல... நாட்டின் பிரதமர். ஒன்னு தெரிஞ்சுக்க... பெத்த தாயை பட்டினி போட்டுட்டு, எத்தனை ஆயிரம் அன்னதானம் செஞ்சாலும் உனக்கு பலனில்லை.

தாய்மொழி தெரியாமல் நீ எவ்வளவு மொழிகளை கற்றாலும் நீ அறிவு கெட்டவன். பெத்த தாயை தெரியாத உன்னை என்னன்னு சொல்றது?

இவ்வாறு அவர் பேசினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்