Paristamil Navigation Paristamil advert login

■ எரிபொருள் : விலை வீழ்ச்சியடைகிறது!!

■ எரிபொருள் : விலை வீழ்ச்சியடைகிறது!!

7 சித்திரை 2025 திங்கள் 14:23 | பார்வைகள் : 608


உலக சந்தையில் குரூட் எண்ணையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதை அடுத்து, பிரான்சில் எரிபொருட்களின் விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்சில் 5 தொடக்கம் 6 சதங்களினால் இந்த விலை வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக UFIP Énergies et Mobilités அமைப்பின் தலைவர் Olivier Gantois எதிர்வு கூறியுள்ளார். 

உலக சந்தையில் குரூட் எண்ணையின் (கச்சா எண்ணை)  விலை $74  டொலர்களில் இருந்து $63 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் பின்னர் இதுபோன்ற குறைந்தவிலை உலக சந்தையில் பதிவாகிறது. அதை அடுத்தே பிரான்சிலும் இந்த விலை வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்