Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் முதன்முறையாக காற்றாலை நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பணம்!!

பிரான்சில் முதன்முறையாக காற்றாலை நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பணம்!!

7 சித்திரை 2025 திங்கள் 18:50 | பார்வைகள் : 611


பிரான்சில் அணுமின் நிலையங்கள் மற்றும் காற்றாலைகள் என இரண்டு விதங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறமை அறிந்ததே. பிரெஞ்சு வரலாற்றில் முதன் முறையாக காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் குற்றப்பணம் அறவிட்டுள்ளது.

Montpellier நகரில் அமைக்கப்பட்டுள்ள  காற்றாலைகளைஅடுத்த நான்கு மாதங்கள் அதனை இயக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 10 நிறுவனங்கள் அதனை இயக்குகின்றன. அவற்றில் EDF Renewables நிறுவனமும் ஒன்றாகும். அந்நிறுவனங்களுக்கு Montpellier நகர நீதிமன்றம் €500,000 யூரோக்கள் குற்றப்பணமும் விதித்துள்ளது.

குறித்த காற்றாலைகளினால் பறவைகள் உயிரிழப்பதாகவும், மிக அரிதான ஆபிரிக்காவில் இருந்து பிரான்சுக்கு வருகை தரும் lesser kestrels போன்ற பறவைகளும் உள்ளடங்குகின்றன. இவ்வருடத்தில் இதுவரை 160 பறவைகள் உயிரிழந்துள்ளன. 2021 ஆம் ஆண்டில் இருந்து மேற்படி lesser kestrels பறவைகள் மாத்திரம் 150 தொடக்கம் 300 வரை உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கோடைகாலத்தில் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வந்தடைகின்றன. இதனால் அடுத்த நான்கு மாதங்களுக்கு காற்றாலைகளை இயக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்