யூதர்களை காத்த பிரெஞ்சு இஸ்லாமியர்கள் - வரலாற்று தடம்!

23 மார்கழி 2016 வெள்ளி 10:34 | பார்வைகள் : 23687
இரண்டாம் உலகப்போர் மிக உக்கிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் அது..! யூதர்கள் மிக கொடூரமாக கொல்லப்பட்டப்போது இஸ்லாமியர்கள் அவர்களை காத்ததாக சொல்ல மறந்த கதை ஒன்று உள்ளது.
பிரான்சுக்குள் நுழைந்த ஹிட்லரின் நாசி படையினர், யூதர்களை மிக கொடூரமாக கொலை செய்துகொண்டிருந்தார்கள். பரிசுக்குள் நுழைந்த நாசி படையினரின் மூர்க்க தாக்குதலில் பல அப்பாவி யூதர்கள் கொல்லப்பட, பரிஸ் பள்ளிவாசல் (Mosque of paris) பல யூதர்களை காத்தது. ஆயிரக்கணக்கான யூதர்களுக்கு 'இஸ்லாமியர்கள்' என அடையாள அட்டை கொடுத்து, பள்ளிவாசலுக்குள் தங்க வைத்துக்கொண்டது. இப்படியாக பல யூதர்கள் பரிஸ் பள்ளிவாசலால் காப்பாற்றப்பட்டனர் 1954ஆம் ஆண்டு வரை!!
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, கடந்த 2012 ஆம் ஆண்டு Free Men என ஒரு திரைப்படம் வெளியாகியது. இயக்குனர் Ismaël Ferroukhi இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். மதங்களின் பெயரால் கொலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் இப்படி ஒரு சம்பவம் ஆச்சரியம் தான் இல்லையா??!
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025