Paristamil Navigation Paristamil advert login

ஓசூர் விமான நிலையத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு

ஓசூர் விமான நிலையத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு

8 சித்திரை 2025 செவ்வாய் 06:46 | பார்வைகள் : 242


ஓசூரில் விமான நிலையம் அமைக்க, இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

சென்னை, கோவைக்கு அடுத்ததாக, தொழில் வளர்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

எனவே, கிருஷ்ணகிரியில், 2,000 ஏக்கரில், ஓசூர் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ஐந்து இடங்களை தேர்வு செய்து, ஆய்வு செய்யும் பணியை, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம், 'டிட்கோ' நிறுவனம்,கடந்த ஆண்டு வழங்கியது. அந்த இடங்களில், ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பின், ஐந்து இடங்களில், இரண்டை தேர்வு செய்து தரும்படி, 'டிட்கோ' வலியுறுத்தியது.

அதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது, ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று என, இரு இடங்களை தேர்வு செய்து டிட்கோவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த இரு இடங்களில் ஒன்றை, தமிழக அரசு தேர்வு செய்யும். அங்கு விமான நிலையம் அமைக்க, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்