வரலாறு உனக்காக காத்திருக்கிறது!
20 மார்கழி 2016 செவ்வாய் 10:38 | பார்வைகள் : 18537
தலைப்பை படித்ததும் என்னமோ ஏதோ என யோசிக்காதீர்கள்! இது ஒரு தீம் பார்க்கின் ஸ்லோகன்! அதாவது விளையாட்டுத்திடல் ஒன்றின் 'வீர வசனம்' சரி.. ஏன் வரலாறு அழைக்கிறது என தெரிந்துகொள்ளலாம்!
Puy du Fou!!!
தற்போது அரசியல்வாதியாக இருக்கும் Philippe de Villiers ல், தனது 27வது வயதில் 1977 இல் இந்த விளையாட்டுத்திடலை உருவாக்கினார். தற்போது பிரான்சில் இரண்டு இடங்களில் இருக்கிறது இந்த திடல்!
Cinéscénie பகுதியில், 23 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 1977 ஆம் ஆண்டு இந்த Puy du Fou திடலை உருவாக்கினார். மிக வெற்றிகரமா இந்த திடல் உருமாற, மீண்டும் பிறிதொரு விளையாட்டுத்திடலை Grand Parc பகுதியில் ஆரம்பித்தார்கள். 55 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிரான்சில், பரிஸ் டிஸ்னிலேண்டுக்கு அடுத்ததாக அதிகளவு மக்கள் கூடும் விளையாட்டுத்திடலாக இது இருக்கிறது.
இங்கு 6 முக்கிய 'அட்வெஞ்சர்' விளையாட்டுக்கள் முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொன்றும் 30 நிமிடத்தில் இருந்து 40 நிமிடங்கள் வரை நீளும்! குறிப்பாக The Secret of the Lance, The Vikings, Triumph's Sign, The Phantom Birds Dance, Richelieu's Musketeer உட்பட, இவ்வரும் புதிதாக Le Dernier Panache வும் சேர்க்கப்பட்டுள்ளது.
விளையாட்டுக்கள் அனைத்தும் வரலாற்றுடன் தொடபுடையது என்பதால் இதற்கு "L'Histoire n'attend que vous" (வரலாறு உனக்காக காத்திருக்கிறது) என ஸ்லோகன் வைத்துள்ளார்கள். வருடத்துக்கு 2 மில்லியன் பேர் வருகை தரும் இந்த விளையாட்டுத்திடலுக்கு இந்த விடுமுறையின் போது செல்லலாமே??
முகவரி : ( 85590 Les Epesses, France)