இஸ்ரேலுக்கு மட்டும் வரி கிடையாது - ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

8 சித்திரை 2025 செவ்வாய் 08:55 | பார்வைகள் : 1625
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 2ம் திகதி பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரியை அறிவித்திருந்தார்.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுப்பதற்காக அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது. இதுபோல், கனடா போன்ற வேறு சில நாடுகளும் பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளன.
இதனால் உலக வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் மீது வரி விதிப்பு கிடையாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதால், அந்த நாட்டுக்கு மட்டும் வரி விதிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு 2-வது முறையாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.