Paristamil Navigation Paristamil advert login

போலிப் பயணச்சீட்டுப் பரிசோதகர் - எச்சரிக்கை!!

போலிப் பயணச்சீட்டுப் பரிசோதகர் - எச்சரிக்கை!!

8 சித்திரை 2025 செவ்வாய் 09:12 | பார்வைகள் : 1215


மெட்ரோவினுள் ஒரு போலிப் பயணச்சீட்டுப் பரிசோதகர் (contrôleur) நடவடிக்கையில ஈடுபடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இது பெருநகரமான லியோன் நகரத்தின் மெட்ரோக்களில் நடந்துள்ளது.

லியோன் மெடரோவின் B அணியில் உள்ள சக்ஸ் கம்பெத்தா (Saxe-Gambetta) நிலையத்தில் கடந்த 26ம் திகதி, இந்தப் போலிப் பரிசோதகர் பயணிகளிடம் பயணச்சீட்டைப் பரிசோதித்து, பலரிடம் குற்றப்பணம் என பணத்தினைப் பெற்றும் உள்ளார்.

பயணிகள் சிலரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, லியோனின் மெட்ரோக்களில், எந்த ஒரு பரிசோதகர் தனியாக இயங்கினால், அவரிடம் பயணச்சீட்டைக் காட்ட வேண்டாம் எனவும், உடனடியாக, அந்த மெட்ரோ நிலையத்திற்குத் தகவல் தருமாறும், தொடர்ச்சியான ஒலி அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த போலிக் குற்றத்தை முன்னுதாரணமாகக் கொண்டு பரிஸ் போன்ற பெருநகரங்களிலும் இந்தக் குற்றம் நடக்கலாம் எனவும், எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்