Paristamil Navigation Paristamil advert login

குழந்தையும் தாயும் காணவில்லை!! - ஜோந்தார்மினரின் தேடுதல்!!

குழந்தையும் தாயும் காணவில்லை!! - ஜோந்தார்மினரின் தேடுதல்!!

8 சித்திரை 2025 செவ்வாய் 09:44 | பார்வைகள் : 1709


பெல்போர் (BELFORT) நகரத்தில் ஒரு 16 வயதுடைய பதின்ம வயதுப் பெண்ணையும், அவரது ஒன்றரை மாதக் குழந்தையையும் காணவில்லை என இந்த நகரத்தின் ஜோந்தார்மினர் தெரிவித்துள்னர்.

16 வயதிலேயே கர்ப்பம் அடைந்ததால் இவரது பேறுகாலம் வரை பரிசின் சமூக குழந்தைகள் நலன் நிறுவனத்தினால் பொறுப்பெடுக்கப்பட்டு, குழந்தை பிறந்நத பின்னர் பெல்போர் நகர சமூக குழந்தைகள் நலன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்த பதின்ம வயதுப் பெண் போதைப்பொருள் பழக்கமுயைடவர் என்றும், பின்னர் பேறுகாலத்திற்கு முதலே அது நிறுத்தப்படடிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த மூன்று வாரங்களாகக் காணவில்லை என்றும், இன்று தான் ஜோந்தார்மினர் முறைப்பாடு பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையில ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

மேற்கண்ட படத்தில் இருக்கும் பெண்ணைக் கண்டால், அல்லது தகவல் தெரிந்தால் 03.84.58.50.02 எனும் இலக்திற்குத் தெரிவிக்கவும் என மக்களிடம் ஜோந்தார்மினர் உதவி கோரி உள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்