Paristamil Navigation Paristamil advert login

பரிசின் உயரமான கட்டிடம் ஈஃபிள்! - இரண்டாவது??

பரிசின் உயரமான கட்டிடம் ஈஃபிள்! - இரண்டாவது??

19 மார்கழி 2016 திங்கள் 10:30 | பார்வைகள் : 19258


பரிசின் உயரமான கட்டிடம்.. உங்களுக்குத் தெரியும்.. சந்தேகமே இல்லாமல் ஈஃபிள் கோபுரம் தான்! இரண்டாவது இடத்தில் எந்த கட்டிடம் இருக்கிறது என தெரியுமா?
 
Tour First!!
 
பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படும் இந்த Tour First கட்டிடமே பரிசின் இரண்டாவது உயரமான கட்டிடம். 324 மீட்டர்கள் உயரமான ஈஃபிள் கோபுரத்துக்கு அருகில் கூட இல்லை... ஆனாலும் இந்த கட்டிடத்தை பார்த்தால்.. அடேயப்பா.. மலைப்பாகத்தான் இருக்கும். 231 மீட்டர்கள் உயரம் இந்த Tour First. ஈஃபிளுக்கும் Tour Firstக்கும் இடையே 93 மீட்டர்கள் வித்தியாசம்.
 
Bouygues நிறுவனத்துக்கு சொந்தமான இந்த கட்டிடம், 1974 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கட்டப்பட்ட போது இதன் உயரம் 159 மீட்டர்களாக இருந்தது. பின்னர் 2007 ஆம் ஆண்டு மீண்டும் புதிதாக நிர்மாணித்து, உயரத்தை கூட்டினார்கள். 2011ஆம் முடிவடைந்த புதிய நிர்மாண வேலைகளுடன், கட்டிடம் 231 மீட்டர்களை எட்டி, பரிசின் இரண்டாவது மிக உயரமான கட்டிடமானது. இது தவிர வெளித்தோற்றம் முற்றாக மாற்றப்பட்டு, புத்தம் புதிய கட்டிடமாக ஜொலித்தது! 
 
மொத்தம் 52 மாடிகளை கொண்டுள்ளது இந்த கட்டிடம்.. உள்ள 'லிப்ஃட்' மற்றும் நகரும் படிகள் மொத்தம் 28 உள்ளன. ஆரம்பத்தில் Michel Stenzel, Pierre Dufau, Jean-Pierre Dacbert ஆகிய மூவரும் இணைந்து வடிவமைத்த கட்டிடத்தை, பின்னர் 2007இல் Kohn Pedersen Fox Associates நிறுவனம் மீள் வடிவமைப்புச் செய்து, தற்போது நீங்கள் காணும் கட்டிடத்தை உருவாக்கினார்கள். 
 
இக்கட்டிடத்தை நீங்கள் பார்க்கும் போது ஒரு 'செல்ஃபி' எடுத்து பேஸ்புக்கில் பகிருங்கள்!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்