ட்ரம்பின் செயல் கொடூரமான செயல் -மக்ரோன்-

8 சித்திரை 2025 செவ்வாய் 12:31 | பார்வைகள் : 1506
டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் கொண்டு வந்துள்ள இறக்குமதி பொருட்களிற்கான அதியுச்ச சுங்கவரி, பிரான்சின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
ஐரோப்பியப் பொருட்களிற்கு 20 சதவீதத்திற்கும் மேலான சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் செயல் ஐரோப்பிய அதிகார மட்டங்களில் பெரும் எதிரொலிகளை ஏற்படுத்தி உள்ளது.
«கொடூரமான மற்றும் ஆதாரமற்ற செயல்» என ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் கண்டித்துள்ளார்.
இதே சமயம் பிரித்தானியப் பிரதமர் « ஒரு பொருளாதாரப் போர்» எனத் தெரிவித்துள்ளார்.
«பொருளாதார இழப்பீடு ஏற்படுவதுடன் பல வேலைவாய்ப்புகள் பறிபோக உள்ளன. மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை, மந்த நிலையை ஏற்படுத்த உள்ளது. இந்த சுங்கவரி பிரான்சின் பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியயான PIB (Le produit intérieur brut) யின் 0.5 வீதத்தை இழக்க வைக்கும்»
என பிரான்சின் பிரதமர் பிரோன்சுவா பய்ரூ எச்சரித்துள்ளார்