மோசடி வழக்கில் பிரான்ஸ் சிறையில் அடைக்கப்பட்ட ருமேனிய இளவரசர்!

8 சித்திரை 2025 செவ்வாய் 12:31 | பார்வைகள் : 1634
2006 முதல் 2013 வரையிலான காலப்பகுதியில் மோசடி கும்பலுடன் பணிபுரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ருமேனியாவின் இளவரசர் பால் (Paul) ருமேனியா பிறப்பித்த ஐரோப்பிய கைது வாரண்டின் கீழ் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
76 வயதான இளவரசர் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் அரச குடும்பத்தின் வாரிசாகக் கூறி சொத்துக்களைப் பெறுவதற்காக மோசடி கும்பலுடன் இணைந்து பணியாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஐரோப்பிய கைது வாரண்டை மறுபரிசீலனை செய்வது குறித்த விசாரணை புதன்கிழமை பரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
டிசம்பர் 18, 2020 அன்று ருமேனிய இளவரசரின் குற்றங்களுக்காக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகள் மற்றும் நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே, ஐரோப்பிய கைது வாரண்டிற்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கில், இஸ்ரேலிய தொழிலதிபர்கள் உட்பட 18 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.