இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 5.9 ஆக பதிவு

8 சித்திரை 2025 செவ்வாய் 12:55 | பார்வைகள் : 510
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக இருக்கிறது. இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் அறியப்படவில்லை என்று அந்நாட்டின் காலநிலை மையம் அறிவித்துள்ளது.
முதலில் கிடைத்த தகவல்களின் படி, ஜகார்த்தா நேரப்படி அதிகாலை 2.48 மணிக்கு ரிக்டரில் 6.2 ஆக நிலநடுக்கம் பதிவானதாகவும், பின்னர் அது 5.9 ஆக இருந்ததாகவும் காலநிலை மையம் கூறி உள்ளது. பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தாததால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.